நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் அடுத்து வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ் தெலுங்கில் உருவாகும் தனது 66வது படத்தில் நடிக்கப்போகிறார். அந்த படத்தை முடித்ததும் மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடிப்பார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் ஒரு படத்தில் நடிக்கப் போகிறார் என்று செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அப்படம் குறித்து இசை அமைப்பாளர் ஜிவி.பிரகாஷ் குமார் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.
அதில், விஜய் மற்றும் வெற்றிமாறன் இருவரும் ஏற்கனவே கமிட் ஆன படங்களில் பிசியாக இருக்கிறார்கள். கால நேரம் கை கூடும்போது அவர்கள் இருவரும் இ6ணைவார்கள். அப்படி அவர்கள் இணையும் படம் இதுவரை யாரும் எதிர்பார்க்காத அளவில் ஒரு மாறுபட்ட படமாக இருக்கும் என்று கூறியுள்ள ஜிவி.பிரகாஷ், வாடிவாசல் படத்திற்காக மூன்று பாடல்களை கம்போஸ் செய்து முடித்துவிட்டோம். இந்த படத்தில் ஒரு ராவான கிராமத்து பாடல் உள்ளது. வாடிவாசல் படத்தின் ஆல்பம் இதுவரை இல்லாத வகையில் வித்தியாசமாக இருக்கும் என்றும் ஜிவி.பிரகாஷ் தெரிவித்திருக்கிறார்.