'மண்டாடி' யார்? : இயக்குனர் விளக்கம் | பாடல்கள் ஹிட்டாவதற்கு 'ரீல்ஸ்' வீடியோக்கள்தான் முக்கியமா? | ரஷ்மி முரளி: தோழி நடிகையைத் தேடிய ரசிகர்கள் | விஜய் படம் ரீ-ரிலீசா… அப்போது அஜித் படமும் ரீ-ரிலீஸ்… | விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா தம்பதிக்கு பெண் குழந்தை | WWE-ல் ராணா டகுபட்டிக்குக் கிடைத்த பெருமை | வீர தீர சூரன் ஓடிடி வாங்கிய விலை இவ்ளோதானா? | ஓடிடி-யில் பெரும் விலைக்கு மோகன்லாலின் எல் 2 :எம்புரான் | புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது |
கடந்த 40 வருடமாக மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி. அவரது மகன் துல்கர் சல்மான் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி அவரும் பத்து வருடங்களை கடந்து விட்டார். இந்த பத்து வருடங்களுக்குள் தந்தை-மகன் இருவரது படங்களும் ஒரே தேதியில் ரிலீசாகும் சூழல் வந்தபோது ஏதோ ஒரு தயாரிப்பாளர் விட்டுக்கொடுத்து கொஞ்சம் இடைவெளிவிட்டு இரண்டு படங்களையும் ரிலீஸ் செய்து வந்தார்கள்.
இந்த நிலையில் முதன்முறையாக மம்முட்டி, துல்கர் சல்மான் இருவரது படங்களும் இன்று (மார்ச் 3) ஒரே நாளில் வெளியாக உள்ளது. தமிழில் நடன இயக்குனர் பிருந்தா இயக்குனராக அறிமுகமாகும் ஹே சினாமிகா என்கிற படத்தில் துல்கர் கதாநாயகனாக நடித்துள்ளார். காஜல் அகர்வால், அதிதி ராவ் ஹைதரி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
அதேபோல மலையாளத்தில் மம்முட்டி நடித்த பீஷ்ம பருவம் படமும் வெளியாகி உள்ளது. இரண்டுமே மலையாளத்தில் உருவாகி இருந்தால் நிச்சயம் அங்குள்ள தயாரிப்பாளர்கள் கூடிப்பேசி இரண்டு படங்களுக்கும் இடைஞ்சல் வராமல் ரிலீஸ் தேதியை மாற்றி இருப்பார்கள். ஆனால் இங்கே துல்கர் படம் தமிழிலும், மம்முட்டி படம் மலையாளத்திலும் வெளியாவதால் இரண்டு படங்களுக்கும் வசூல் ரீதியாக எந்த பிரச்சினையும் இருக்காது என்றே தெரிகிறது.