தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி |

சாதி சனம், காதல் எப்எம் மற்றும் குச்சி ஐஸ் படங்களை இயக்கிய விஜய் பிரகாஷ் தற்போது இயக்கி வரும் படம் உலகம்மை. எழுத்தாளர் சு சமுத்திரத்தின் பிரபலமான நாவலான 'ஒரு கோட்டுக்கு வெளியே'வை தழுவி இந்த படம் தயாராகிறது. மெட்ராஸ் டிஜிட்டல் சினிமா அகாடமி சார்பில் டாக்டர் வீ .ஜெயப்பிரகாஷ் இப்படத்தை தயாரித்துள்ளார்.
கௌரி கிஷன் மற்றும் வெற்றி மித்ரன் ஆகியோர் கதையின் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். மாரிமுத்து, ஜி.எம்.சுந்தர், அருள்மணி, காந்தராஜ், சாமி, ஜேம்ஸ், பிரணவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டாக்டர் குபேந்திரன் வசனம் எழுதியுள்ளார், கே வி மணி ஒளிப்பதிவு செய்துள்ளார், இளையராஜா இசை அமைத்துள்ளார்.
'ஒரு கோட்டுக்கு வெளியே' எனக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நாவல். எனவே, அதை திரைப்படமாக எடுக்க விரும்பினேன். சமுத்திரம் காலமாகிவிட்டதால், அவருடைய மனைவியிடம் இருந்து உரிமையைப் பெற்றுள்ளோம்.
திருநெல்வேலி பின்னணியில் 1970களில் கதை நடக்கிறது. உலகம்மை என்ற கிராமத்துப் பெண்ணைச் சுற்றி கதை நகர்கிறது. அந்தக் காலத்தில் நிலவிய சாதி அமைப்பை உலகம்மை எப்படி எதிர்க்கிறாள் என்பதை படம் சித்தரிக்கிறது. படப்பிடிப்பு பணிகள் முடிந்திருக்கிறது. ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். என்றார்.




