மனிதத்தன்மையை அழித்துவிடும் : நிவேதா பெத்துராஜ் | 200 படங்களை கடந்த 2025 | ரிலீசுக்கு முன்பே லாபத்தை சம்பாதித்துக் கொடுத்த காந்தாரா சாப்டர் 1 | முதல் நாளில் 154 கோடி வசூலித்த பவன் கல்யாணின் ஓஜி | அக்., 1ல் ஓடிடியில் வெளியாகும் மதராஸி | ஜனநாயகன் பாடல் வெளியீட்டு விழா : அரசியல் பேசப்படுமா? அடக்கி வாசிக்கப்படுமா? | சின்ன வயது கஷ்டங்களை சொல்லும் தனுஷ் | கிடா சண்டையை மையமாக கொண்டு உருவாகும் ஜாக்கி | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அர்ச்சனா | பிளாஷ்பேக்: சினிமாவான முதல் உண்மை சம்பவம் |
‛96' பட புகழ் நடிகை கவுரி கிஷன் முதன்மை வேடத்தில் நடிக்கும் படம் “உலகம்மை". நாயகனாக வெற்றி மித்ரன் நடிக்க உடன் மாரிமுத்து, ஜி.எம்.சுந்தர், பிரனவ், அருள்மணி, காந்தராஜ், ஜெயந்திமாலா, அனிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். காதல் எப்எம், குச்சி ஐஸ் படங்களை இயக்கிய விஜய் பிரகாஷ் இயக்குகிறார்.
1970ல் நடைபெற்ற சாதிய பிரச்சனையை மய்யமாக கொண்டு நெல்லையில் நடக்கும் கதை “உலகம்மை". பிரபல எழுத்தாளர் சு.சமுத்திரம் எழுதிய நாவலை தழுவி எடுக்கப்படும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைப்பது இப்படத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.