திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
மலையாளத்தில் வரவேற்பை பெற்ற ‛ஜோசப்' படம் தமிழில் ‛விசித்திரன்' என்ற பெயரில் ரீ-மேக் ஆகி உள்ளது. ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடித்து தயாரித்துள்ளார். மலையாளத்தில் இயக்கிய பத்மகுமாரே தமிழிலும் இயக்கி உள்ளார். இயக்குனர் பாலா தனது பி ஸ்டுடியோஸ் சார்பில் இந்த படத்தை வெளியிடுகிறார்.
இப்பட விழாவில் பேசிய இயக்குனர் பாலா, ‛‛மலையாளத்தை காட்டிலும் இந்த படம் நன்றாக வந்துள்ளது. ஆர்.கே.சுரேஷிற்கு நல்லதொரு படம். இதை வைத்து அடுத்தடுத்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடி. இனி ஏனோ தானோ என படங்களை தேர்வு செய்யாதே பெயரை கெடுத்து கொள்ளாதே, உன் மரியாதையை காப்பாத்திக்கோ'' என அட்வைஸ் செய்தார்.