ஜூலை 25ல் ‛அவதார் 3' டிரைலர் | இசை நிகழ்ச்சி! கெனிஷா உடன் இலங்கை சென்ற ரவி மோகன் | ‛பராசக்தி' படத்தில் இணைந்த ராணா | வார் 2 படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | மாரி செல்வராஜின் 'பைசன்' பிஸினஸ் எப்படி? | இறுதிக்கட்டத்தை எட்டிய ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் படம் | இலங்கை தமிழ் படத்தில் டி.ஜே.பானு | புராண அனிமேஷன் படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | வசூலை குவிக்க அடுத்து வருகிறது 'ட்ரான்: ஏரிஸ்' | அனிருத் இசை நிகழ்ச்சி திடீர் ரத்து |
விஜய் ஆண்டனி நடிப்பில் செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் T . D ராஜா தயரிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கிய கோடியில் ஒருவன் திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி வெளியானது. அரசியல் கருத்துக்கள் நிறைந்த இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது .
இந்நிலையில் பா.ம.க நிறுவனர் டாக்டர். ராமதாஸ் கோடியில் ஒருவன் திரைப்படத்தை பார்த்து பாராட்டிள்ளார். அவர் கூறியதாவது : "ஒரு படம் பார்த்து முடிக்க 2 அல்லது 3 நாட்களாகி விடும். அந்த வரிசையில் கடந்த 3 நாட்களாக நான் பார்த்த திரைப்படம் 'கோடியில் ஒருவன்'. ஓர் அரசியல்வாதி எவ்வாறு இருக்க வேண்டும்.... எவ்வாறு இருக்கக்கூடாது, ஓர் அரசியல்கட்சி எவ்வாறு இருக்க வேண்டும்.... எவ்வாறு இருக்கக்கூடாது! மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்.... யாருக்கு வாக்களிக்கக் கூடாது! கட்சிகளுக்கும், மக்களுக்கும் பாடம் சொல்லும் திரைப்படம் இது!".
இவ்வாறு தெரிவித்துள்ளார் .