பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் | அங்கிளான என்னை அண்ணனாக மாற்றிவிட்டார் பஹத் பாசில் ; இயக்குனர் சத்யன் அந்திக்காடு பெருமிதம் | ரீல்ஸ் பைத்தியமாக நடிக்கும் வர்ஷினி வெங்கட் | பாலாஜி சக்திவேல் ஜோடியான வீடு அர்ச்சனா | விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்காக தானாகவே விநாயகர் சிலையை உருவாக்கிய பிரம்மானந்தம் | ஆஸ்கர் போட்டிக்கு தேர்வான மலையாள இயக்குனர் படம் |
இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் ராம்சரணை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். இரட்டை வேடங்களில் நடிக்கும் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தில் ராம் சரணுக்கு வில்லனாக எஸ்.ஜே சூர்யா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் மாநாடு திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் எஸ். ஜே சூர்யா மிரட்டி இருந்தார். அதன்மூலம் இந்த பட வாய்ப்பு அவரை தேடி வந்துள்ளது. மேலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.