ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தமிழ்த் திரையுலகின் ஜாம்பவான்கள் என இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரைச் சொல்லலாம். இருவரும் இணைந்த பல படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன. இருவரும் நெருங்கிய நட்புடன் இன்றும் இருப்பவர்கள். இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவுக்கு ரஜினிகாந்த் அடிக்கடி சென்று வருகிறார் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே.
இளையராஜாவின் தயாரிப்பில் ரஜினிகாந்த் ஒரு புதிய படத்தில் நடிக்கப் போகிறார் என்ற தகவல் கடந்த சில வாரங்களாகவே இருந்து வந்தது. இந்நிலையில் ரஜினிகாந்தின் 169வது படத்தை நெல்சன் இயக்கப் போகிறார் என்ற அறிவிப்பு வெளியானது.
இதனிடையே, நேற்று ரஜினியுடன் இருக்கும் பழைய புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து 'என்றும் என்றென்றும்' என இளையராஜா பதிவிட்டிருக்கிறார். இது எதற்காக என்று ரசிகர்கள் குழம்பிப் போயிருக்கிறார்கள். இளையராஜா, ரஜினிகாந்த் கூட்டணி மீண்டும் அமையுமா என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.