மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மீடு சர்ச்சையின்போது பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு கூறினார் பாடகி சின்மயி. தொடர்ந்து பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை மற்றும் பாலியல் தொல்லை பற்றி குரல் கொடுத்து வருகிறார். அதோடு வைரமுத்துவிற்கு எதிராக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார்.
இந்நிலையில் வைரமுத்துவின் இலக்கிய பொன்விழாவை முன்னிட்டு வைரமுத்து இலக்கியம் 50 எனும் இலச்சினையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு வாழ்த்தினார். இதுப்பற்றி, வாவ் என குறிப்பிட்டார் சின்மயி. மேலும், ‛‛இந்த வாவை பாத்துட்டு 'அவர பாராட்டுறீங்களே'ன்னு அறிவிலிகள் தான் கேப்பாய்ங்க. எத்தன பொண்ணுங்க மேல கைய்ய வெச்சாலும் எல்லா சப்போர்டும் உண்டுன்னு வெட்ட வெளிச்சமா தெரியுதே நம்ம முற்போக்கு நாட்ல. பெண்கள் இங்க பாதுகாப்பு எல்லாம் எதிர்பார்க்கக்கூடாது. நாம நம்ம வேலைய பாப்போம்'' என பதிவிட்டுள்ளார்.