பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் | காதலில் விழுந்தாரா 'காந்தா' நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் | வெப் தொடரில் லட்சுமி பிரியா | ஆங்கிலப் படத்தில் இளையராஜாவின் சிம்பொனி | பிளாஷ்பேக் : தமிழ் படத்தில் காட்டு ராணியாக நடித்த பாலிவுட் நடிகை | 'அரசன்' படத்தில் இணைந்த விஜய் சேதுபதி |

கார்த்தி இரண்டு வேடங்களில் நடித்துள்ள படம் சர்தார். பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கார்த்தியுடன் ராசி கண்ணா,ரஜிஷா விஜயன், சிம்ரன் உள்ளிட்டோர் நடிக்க, ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் கார்த்தி போலீஸ் ஆகவும், வயதான வேடத்திலும் நடித்துள்ளதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. தற்போது படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சர்தார் படத்தின் டிஜிட்டல் உரிமையை நடிகர் அல்லு அர்ஜுனின் ஆஹா தமிழ் ஓடிடி நிறுவனம் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தியேட்டர்களில் வெளியாகி ஓடி முடித்த பிறகே இப்படம் ஓடிடியில் வெளியாகிறது.