ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
விஜய் டிவியின் டாப் சீரியலான பாரதி கண்ணம்மாவில் ஹீரோ பாரதியின் தம்பி அகில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் அகிலன். அகிலன், சீரியலில் நடித்துக் கொண்டே தனது சினிமா கனவையும் துரத்த ஆரம்பித்தார். அவரது முயற்சிக்கு வெற்றிக் கிடைக்கும் வகையில், விஷால், பிரபுதேவா என முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடிக்க வரிசையாக கமிட்டானார். இதனால் அவர் தொடரை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில் அவர் தெலுங்கு படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த தகவலை வெளியிட்டுள்ள அவர், தயாரிப்பாளர் ரவிசங்கர், டைரக்டர் பானுசங்கர், இசையமைப்பாளர் மணிசர்மா, ஒளிப்பதிவு ரமேஷ் ஆகியோர்களின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார். இதை அடுத்து ஹீரோவாக நடிக்க உள்ள நடிகர் அகிலனுக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.