நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ஸ்கிரீன் சீன் தயாரிப்பில் ‛இடியட், சாணிக்காயிதம்' படங்கள் வெளியீட்டுக்கு தயராகி வருகின்றன. இந்நிலையில், ஜெயம் ரவி நடிப்பில் மூன்று திரைப்படங்களை தயாரிக்கும் இந்நிறுவனம் அவற்றில் முதல் படத்தின் தலைப்பாக அகிலன் என பெயரிட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
ஜெயம் ரவி நடிப்பில் பூலோகம் திரைப்படத்தை இயக்கிய என்.கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் இதுவரை ஏற்றிராத வேடத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார். பிரியா பவானி சங்கர் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் நாயகிகளாக நடிக்கின்றனர். பிரமாண்ட பொருட்செலவில் இப்படம் தயாராகி வருகிறது.
துறைமுகத்தை மையமாகக் கொண்ட இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் தூத்துக்குடியிலும், சில முக்கிய காட்சிகள் சென்னை காசிமேட்டிலும் படமாக்கப்பட்டுள்ளன. 80 சதவீதத்திற்கும் அதிகமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில் குஜராத்தில் உள்ள மிகப்பெரிய கண்டெய்னர் தளத்தில் நடைபெறவுள்ள படப்பிடிப்புடன் நிறைவடைகிறது.
முழுக்க துறைமுக பின்னணியில் உருவாகியுள்ள அகிலன், தமிழ் திரையுலகில் புதுமையாக முயற்சியாக இருக்கும் என்றும் ஜெயம் ரவியின் கதாபாத்திரமும், நடிப்பும் பெரிதும் பேசப்படும் என்கின்றனர் படக்குழுவினர்.
ஜெயம் ரவியின் 28வது படமான அகிலனுக்கு சாம் சி எஸ் இசை அமைக்கிறார். விவேக் ஒளிப்பதிவை கையாள, விஜய் முருகன் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்றுள்ளார். இந்த வருட கோடை காலத்தில் படம் வெளியாகிறது.