நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

அண்ணாத்த படத்திற்கு பின் பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்தார் நடிகர் ரஜினிகாந்த். தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்பராஜ், வெற்றிமாறன் உள்ளிட்ட சில இயக்குனர்களின் பெயர்கள் அடிப்பட்டன. இந்நிலையில் ரஜினியின் 169வது படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கிறார். ஏப்ரல் படத்தின் பூஜையும், மேயில் படப்பிடிப்பும் துவங்குகிறது.
கோலமாவு கோகிலா படம் மூலம் இயக்குனராக அறிமுகமான நெல்சன் அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கி வெற்றி பெற்றார். இப்போது விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி உள்ளார். ஏப்ரலில் பீஸ்ட் வெளியாக உள்ள நிலையில் அடுத்தப்படியாக ரஜினி பட வாய்ப்பை பெற்றுள்ளார். குறுகிய காலத்திலேயே ரஜினி பட வாய்ப்பை பெற்றுள்ள நெல்சனுக்கு அதிர்ஷ்டத்துடன் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.