கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக உள்ளார். தற்போது துபாயில் ஓய்வெடுத்து வரும் அவர் கர்ப்பமாக உள்ள அவரின் சில படங்களை சமூக ஊடகத்தில் பகிர்ந்தார். இந்நிலையில் கர்ப்ப காலத்தில் பெண்கள் எந்த மாதிரியான பிரச்னைகளை சந்திக்கிறார்கள், உடல் கேலி உள்ளிட்டவை குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், ‛‛கர்ப்ப காலத்தில் நம் உடல் எடை அதிகரிப்பு உள்ளிட்ட பல மாற்றம் ஏற்படுகிறது. குழந்தை வளரும் போது, நம் வயிறு மற்றும் மார்பகங்கள் பெரிதாகி, நம் உடல் பாலுாட்ட தயாராகிறது. சிலருக்கு ஸ்ட்ரெச் மார்க்ஸ் வரலாம். நம் வாழ்வின் மிக அழகான, விலைமதிப்பற்ற கட்டத்தில் நாம் சங்கடமாகவோ அல்லது அழுத்தமாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை.
பிரசவத்திற்குப் பிறகு நாம் முன்பு இருந்த அழகை திரும்பப் பெற சிறிது காலம் ஆகலாம் அல்லது பழைய உருவத்தை திரும்ப பெற முடியாமலும் போகலாம். இந்த மாற்றங்கள் இயற்கையானவை. உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துங்கள். உங்கள் கணவர், குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் பேசுங்கள். உங்கள் உணர்வுகளை அடைத்து வைத்திருப்பது உங்களை மோசமாக உணர வைக்கும். லேசான நீச்சல் அல்லது நடைபயிற்சி உங்கள் மனதைத் தெளிவுபடுத்த உதவும்.
குழந்தை பிறக்கும் முழு செயல்முறையும், நாம் அனுபவிக்கும் பாக்கியம் கொண்ட ஒரு கொண்டாட்டம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். என்னுடன் சேர்ந்து இந்த அற்புதமான கட்டத்தில் இருப்பவர்களுக்கு இந்தப் பதிவு உதவும் என நம்புகிறேன். என் அன்பை உங்களுக்கு அனுப்புகிறேன்.
இவ்வாறு உணர்ச்சியோடு கூறியுள்ளார்.