'வின்னர், கிரி' - காமெடியை மீண்டும் தருமா 'கேங்கர்ஸ்' கூட்டணி | இளையராஜா பாடலால் 'குட் பேட் அக்லி' ஹிட்டானதா?: கங்கை அமரன் பேச்சுக்கு மகன் பிரேம்ஜி சொன்னது என்ன? | உண்மை கதையில் யோகி பாபு | வெற்றி ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகை | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக திரும்பும் ஷ்ரத்தா | 'மாமன்' சூரியின் கதை: இயக்குனர் தகவல் | பிளாஷ்பேக்: பல தலைமுறைகளை வாழ வைத்த 'மைடியர் குட்டிச்சாத்தான்' | பிளாஷ்பேக்: காதல் சின்னத்தை மீட்டெடுக்க விரும்பிய வி.என்.ஜானகி | மே 1 : சினிமா ரசிகர்களுக்காக பல வெளியீடுகள் | கவினின் 'டாடா' படம் ஓடிடி.,யில் எங்கே போனது? |
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையான யாஷிகா ஆனந்த், கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். கவர்ச்சிக்கு பெயர் போன யாஷிகா சின்னத்திரையின் பிக்பாஸ் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானார். சமீபத்தில் விபத்தில் சிக்கி மீண்டு வந்திருக்கும் யாஷிகா, போட்டோஷூட், ரியாலிட்டி ஷோக்கள் என பிசியாக வலம் வருகிறார்.
இந்நிலையில் அவர் சமீபத்தில் சமூகவலைதளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ஒருவர் யாஷிகாவிடம் 'நீங்கள் கன்னித்தன்மை உடையவரா?' என அவர் கன்னித்தன்மையை பரிசோதிக்கும் கேள்வியை எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள யாஷிகா எந்த வித டென்ஷனும் இல்லாமல் கூலாக 'இல்லை நான் யாஷிகா' என கூறியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பெண்களை குறிப்பாக செலிபிரேட்டியாக வலம் வரும் பெண்களை, உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் தேவையில்லாத கேள்விகளை நாகரீகமற்ற சில நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர். அவர்களை போன்றவர்களை யாஷிகா மிகவும் சாதரணமாக கடந்து சென்றதை பலரும் பாராட்டி வருகின்றனர். இதுபோல பெண்களிடம் கேள்வி கேட்பவர்கள் உண்மையில் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் எனவும், இவர்களின் கேள்விகளுக்கு கஷ்டப்பட்டு பதிலளித்து பெண்கள் தங்களை வருத்திக்கொள்ள வேண்டாம் எனவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.