மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், மஞ்சிமா, ரைசா, ரெபா மோனிகா நடிப்பில் தயாராகி உள்ள ‛எப்ஐஆர்' படம் பிப்., 11ல் திரைக்கு வருகிறது. இப்பட டிரைலர் விழாவில் விஷ்ணு விஷால் பேசுகையில், ‛‛எனக்கு எமோஷனல் தருணம் இது. இந்த மேடை மிக முக்கியமான மேடை. என் அப்பா இல்லை என்றால் நான் இங்கு இருந்திருக்க மாட்டேன். எனக்காக நிறைய உழைத்திருக்கிறார். நான் அவரது இடத்தில் இருந்தால் இது போல் செய்திருப்பேனா என்பது தெரியாது, அவருக்கு நன்றி.
மனுவை சந்தித்த போது நான் நிறைய படம் பண்ணிட்டேன் ஆனால் இன்னும் புதிதாக ஒரு நடிகராக நல்ல படம் செய்ய வேண்டும் என தோன்றியது. ராட்சசன் படம் இந்திய அளவில் ஒரு நடிகராக ஒரு மரியாதை பெற்று தந்தது. இந்தக் கதை சொன்ன போதே எனக்கு பிடித்திருந்தது. எனக்கு சையத் முகமது என ஒரு நண்பர் இருந்தார், அவனுக்கு நடந்த சில விஷயங்களை சொல்லும் போது, எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் வளர்ந்த விதம் வேறு, ஆனால் இந்தக் கதை கேட்ட போது அதை உணர்ந்தேன், இது உண்மையில் நடக்கிறதே, இதை சொல்ல வேண்டும் என தோன்றியது. ஒரு கட்டத்தில் இந்த படம் தயாரிப்பாளர் தயாரிக்க முடியாத சூழ்நிலையில் என்னிடம் வந்து நீங்கள் காத்திருக்க வேண்டும் என உண்மையை சொன்னார் மனு, அவரது நேர்மை பிடித்திருந்தது அதனால் தான் இந்தப்படம் செய்தேன். அவருக்காக தான் இந்தப்படம் செய்தேன்.
இன்று 4 படங்கள் செய்கிறேன், எனக்கு நம்பிக்கை தந்த மனுவுக்கு நன்றி. நிறைய பேர் படம் பார்த்துவிட்டார்கள், தனுஷ் படம் பார்த்து விட்டார், ராட்சசன் படத்தை தாண்டி இந்தப்படத்தில் ஒரு நடிகராக மிரட்டி விட்டீர்கள் என்று பாராட்டினார், ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அதற்காக அவருக்கு நன்றி. லாக்டவுன் நிறைய டைம் தந்தது, அதனால் எல்லோரும் மீண்டும் மீண்டும் உழைத்து அழகாக இந்தப்படத்தை உருவாக்கியுள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.