லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
பிரபல இயக்குநர் பி.வாசுவின் மகன் ஷக்தி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். பின்னர் 2007-ல் தொட்டால் பூ மலரும் என்ற படத்தில் நாயகனாக நடித்தார். அதன் பிறகு சில படங்களில் நடித்த சக்திக்கு பின்னர் எதிர்பார்த்தபடி படவாய்ப்புகள் இல்லை. பின்னர் பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். இந்த நிலையில் தற்போது விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கும் டைகர் என்ற படத்தில் வில்லனாக நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் சக்தி . இயக்குனர் முத்தையாவின் திரைக்கதை, வசனத்தில் உருவாகும் இந்த படத்தை கார்த்திக் இயக்குகிறார். இப்படத்தில் ஸ்ரீதிவ்யா, ஆனந்திகா ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள்.