புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் |
'சேது' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் விக்ரம். அதன்பின் அவர் நடித்த படங்கள், கதாபாத்திரங்கள் அவருக்கென ஒரு தனி இடத்தை தமிழ் சினிமாவில் தேடிக் கொடுத்தது.
விக்ரம் மகன் துருவ் விக்ரம் 2019ல் வெளிவந்த 'ஆதித்ய வர்மா' படம் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்தப் படம் பெரிய அளவில் ஓடவில்லை என்றாலும் துருவ்வுக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. தன்னுடைய இரண்டாவது படமான 'மகான்' படத்தில் அப்பா விக்ரமுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பும் அவருக்கு அமைந்தது.
அப்பா, மகன் இருவருமே நாயகர்களாக இணைந்து நடிக்கும் படங்கள் தமிழ் சினிமாவில் அபூர்வமாக அமைபவை. சிவாஜிகணேசன் - பிரபு, சத்யராஜ் - சிபிராஜ், கார்த்திக் - கவுதம் கார்த்திக் என சில கூட்டணி அதில் குறிப்பிட வேண்டியவை.
அந்த வரிசையில் விக்ரம், துருவ் விக்ரம் இருவரும் இணைந்த முதல் படமான 'மகான்' படம் தியேட்டர்களில் வெளிவந்தால் அதைக் கொண்டடலாம் எனக் காத்திருந்த விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு ஏமாற்றம்தான். 'மகான்' படம் ஓடிடி தளத்தில் அடுத்த மாதம் வெளியாவதால் அவர்களால் இந்த அபூர்வக் கூட்டணியை தியேட்டர்களில் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு மட்டும் வருத்தமாக இருக்காது, விக்ரம், துருவ் விக்ரம் இருவருக்கும் கூட வருத்தமாகத்தான் இருக்கும்.