ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் ரிப்புபரி படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் காவ்யா அறிவுமணி. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கேரக்டரில் நடித்து புகழ்பெற்றவர். பாரதி கண்ணம்மா தொடரிலும் நடித்தார். இப்போது சினிமா நடிகை ஆகிவிட்டார்.
படத்தில் நடிப்பது தொடர்பாக அவர் கூறியதாவது: நான் சினிமாவில் நடிக்க ஒப்பந்தமானது வேறொரு படத்தில் ஆனால் ரிப்புபரி எனது முதல் திரைப்படமாக அமைந்து விட்டது. சினிமாவில் நடிக்கும் ஆசையில் இருந்தபோதுதான் பாரதி கண்ணம்மாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது, என்னுடைய கதாபாத்திரம் பிரபலமானதும், பாண்டியன் ஸ்டோர் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்போது நான் நினைத்த மாதிரி சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருக்கிறேன்.
நான் சீரியலில் நடிப்பதில் இருந்து முற்றிலும் மாறுட்டதாக இது இருக்கும். கிராமப்புற பின்னணியில் திகில் கலந்த நகைச்சுவை படமாக உருவாகிறது. இரண்டு நண்பர்களின் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளைச் சுற்றியே கதைக்களம் அமைந்துள்ளது. நான் மகேந்திரன் ஜோடியாக நடிக்கவில்லை. ஆனாலும் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறேன். என்றார்.