அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
ஹிட் சீரியல்களில் ஒன்றான 'கண்ணான கண்ணே' சீரியலில் பப்லு, நித்தியா தாஸ், நிமிஷிகா, ராகுல் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். நடிகை நித்தியா தாஸ் யமுனா என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியின் சித்தியாக நடித்து வந்தார். அவரது கதாபாத்திரம் சீரியலில் முக்கிய இடத்தை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் திடீரென சீரியலை விட்டு விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடரிலிருந்து நித்தியா தாஸ் ஏன் விலகினார் என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. இனி யமுனா கதாபாத்திரத்தில் யார் நடிக்கப்போகிறார் என்ற ரசிகர்களின் கேள்விக்கு, சின்னத்திரை வட்டாரங்களில் சோனியா போஸ் நடிப்பார் என பேசப்பட்டு வருகிறது. இருப்பினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. கண்ணானே கண்ணே தொடர் இதுவரை 300 எபிசோடுகள் வெற்றிகரமாக கடந்துள்ளது.