ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
உலகமே கொரானோ மூன்றாவது அலையால் திண்டாடிக் கொண்டிருக்க நடிகை சமந்தா சுவிட்சர்லாந்து நாட்டிற்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளர். நேற்று “நாள் 4, மேஜிக் நிகழ்ந்த போது,” என ஒரு பனி மலையில் பனிச்சறுக்கு உடையுடன் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். அதன்பின் அவர் பனிச்சறுக்கு செய்யும் வீடியோ ஒன்றையும் பதிவிட்டார்.
அந்த வீடியோ பதிவில் அவர் குறிப்பிட்டுள்ள வார்த்தைகள்தான் யாரைக் குறிக்கிறது என்பது கேள்வியாக எழுகிறது. அதில், “உங்களது ஈகோவை விடுங்கள் என வீட்டில் சொன்னார்கள். உண்மையான வார்த்தைகள் எதுவும் பேசப்படவில்லை, புதிய ஆரம்பம், ஸ்கையிங்” என பதிவிட்டுள்ளார்.
கடந்த பத்து நாட்களாக சமந்தா, நாகசைதன்யா பிரிவு பற்றி மீண்டும் செய்திகளில் அடிபட்டு வருகிறது. நாகசைதன்யா, அவரது அப்பா நாகார்ஜுனா இருவரும் இணைந்து நடித்த 'பங்கார்ராஜு' படத்தின் பிரமோஷன் நிகழ்வுகளில் இருவருமே 'பிரிவு' பற்றி சில விஷயங்களைப் பகிர்ந்திருந்தனர். அவற்றையும் மனதில் வைத்து சமந்தா 'ஈகோ' பற்றிய பதிவைப் பதிவிட்டிருக்கலாமோ ?.