ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் இயக்குனரான நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் பீஸ்ட். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இயக்குனர் செல்வராகவன், மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, யோகிபாபு, விடிவி கணேஷ், லிலிபுட் புரூக்கி, நடிகை அபர்ணா தாஸ், அங்கூர் அஜித் விகால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
முழுக்க முழுக்க சட்டவிரோத கடத்தலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் ராணுவ கமாண்டாவாக நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனிருத் இசையில் இப்படத்தின் பாடல்கள் மாஸாக உருவாகி உள்ளன. இந்நிலையில் படத்தின் அடுத்த அப்டேடாக படத்தின் போஸ்டர் ஒன்று ஜனவரி 26 குடியரசு தினத்தன்று வெளியாக உள்ளது எனத் தகவல் வெளியாகி உள்ளது. ஒருவேளை அன்றே படத்தின் ஒரு பாடலின் லிரிக் வீடியோவும் வெளியாகவும் வாய்ப்பிருக்கிறது என்கின்றனர்.
அடுத்து காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று பீஸ்ட் படத்தில் சிவகார்த்திகேயன் எழுதி இருக்கும் பாடலை வெளியிட முடிவு செய்திருப்பதாகவும் தகவல் பரவுகிறது.