தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்து கடந்த டிசம்பர் மாதம் வெளியான படம் 'புஷ்பா'.
தெலுங்கில் தயாரான இப்படம், தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் ஆகி வெளியாகி நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது. கடந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியானது. அதன்பிறகே பல சினிமா பிரபலங்கள் படத்தைப் பார்த்து பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
நடிகர் கமல்ஹாசனும் தற்போதுதான் இப்படத்தை ஓடிடி தளத்தில் பார்த்துள்ளார். அது பற்றிய தகவலை படத்தின் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் வெளியிட்டுள்ளார். “நேரம் ஒதுக்கி, புஷ்பா படத்தைப் பார்த்த உலகநாயகன் கமல்ஹாசன் சாருக்கு நன்றி. நீங்கள் மிகவும் இனிமையானவர் சார். எங்கள் அனைவரின் வேலை குறித்து அன்பான வார்த்தைகளைத் தெரிவித்த உங்களுக்கு நன்றி,” என கமல்ஹாசன் படம் பார்க்கும் போது எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
'புஷ்பா' படத்தைப் பார்த்துப் பாராட்டிய கமல்ஹாசனுக்கு படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் நன்றி தெரிவித்துள்ளார்.