நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
உலக சினிமா விருதுகளில் ஆஸ்கருக்கு அடுத்த இடம் வகிக்கிறது கோல்டன் குளோப் விருது. இந்த விருது வழங்கும் விழா ஆஸ்கர் விழாவுக்கு முன்னதாக பிரமாண்டமாக நடத்தப்படும், இதில் விருது வாங்கும் படங்களே பெரும்பாலும் ஆஸ்கர் விருதும் பெறும்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கோல்டன் விருது விழா களையிழந்து விட்டது. இந்த ஆண்டுக்கான கோல்டன் விருது விழா சத்தமின்றி நடந்து முடிந்து விட்டது. முக்கியமான நிர்வாகிகள் மட்டும் நேரில் கலந்து கொள்ள ஆன்லைனின் வாக்கெடுப்பு நடத்தி விருது பட்டியலை அறிவித்து விட்டார்கள்.
இதில் கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்த வில் ஸ்மித் சிறந்த நடிகராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். பீயிங் தி ரிக்கோர்டஸ் படத்தில் நடித்த நிக்கோல் கிட்மேன் சிறந்த நடிகையாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். பெண் இயக்குனர் ஜேன் கேம்பியன் சிறந்த இயக்குனராகவும், அவர் இயக்கிய தி பவர் ஆப் டாக் சிறந்த படமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய வெஸ்ட் சைட் ஸ்டோரி படம் சிறந்த காமெடி படமாக தேர்வு பெற்றுள்ளது.