பாடல்கள் ஹிட்டாவதற்கு 'ரீல்ஸ்' வீடியோக்கள்தான் முக்கியமா? | ரஷ்மி முரளி: தோழி நடிகையைத் தேடிய ரசிகர்கள் | விஜய் படம் ரீ-ரிலீசா… அப்போது அஜித் படமும் ரீ-ரிலீஸ்… | விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா தம்பதிக்கு பெண் குழந்தை | WWE-ல் ராணா டகுபட்டிக்குக் கிடைத்த பெருமை | வீர தீர சூரன் ஓடிடி வாங்கிய விலை இவ்ளோதானா? | ஓடிடி-யில் பெரும் விலைக்கு மோகன்லாலின் எல் 2 :எம்புரான் | புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே |
கொரோனா மூன்றாவது அலை பரவல் அதிகமாகி வரும் சூழ்நிலையில் பல மாநிலங்களில் அடுத்தடுத்து புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். சினிமா தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கான அனுமதி கேரளா, கர்நாடகா, தமிழகம் ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் அமலில் உள்ளது. இந்நிலையில் ஆந்திராவிலும் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என அம்மாநில அரசு இன்று அறிவித்துள்ளது. நாளை முதலே இது அமலுக்கு வருகிறது.
இதன் காரணமாக பொங்கலுக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ள சில தெலுங்குப் படங்கள் சிக்கலை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் ஏற்கெனவே டிக்கெட் விலை மிகவும் குறைக்கப்பட்டுள்ளதால் திரையுலகினர் கடும் சிக்கலில் உள்ளார்கள். இந்நிலையில் 50 சதவீத இருக்கை என்பது அவர்களது வருவாயை மேலும் குறைத்துவிடும்.
தென்னிந்திய மாநிலங்களில் இன்னும் தெலங்கானாவில் மட்டும் 100 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களில் காட்சிகள் நடைபெற்று வருகிறது. அங்கும் விரைவில் 50 சதவீத இருக்கை அனுமதி என்ற அறிவிப்பு வரலாம் என்கிறார்கள். இன்னும் ஓரிரு மாதங்களாவது இந்த நிலை நீடிக்கலாம் எனத் தெரிகிறது.