மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி இளம் கதாநாயகர்களில் முக்கியமானவர் அல்லு அர்ஜுன். அவரது படங்களுக்கும், நடனத்திற்கும் என தனி ரசிகர்கள் கூட்டம் தெலுங்கில் மிக அதிகமாக இருந்தது. அது போல அவருக்கு மலையாளத்திலும் ரசிகர்கள் அதிகம். ஹிந்தியில் அல்லு அர்ஜுன் படங்களை யு டியூப் தளங்களில் பார்த்தவர்களின் எண்ணிக்கை பல கோடிகளைத் தாண்டும்.
இருந்தாலும் தமிழிலும், ஹிந்தியிலும் அவரது தெலுங்குப் படங்கள் டப்பிங் ஆகி வெற்றி பெற்றதுமில்லை, வசூலைக் குவித்ததும் இல்லை. சென்னையில் பிறந்து வளர்ந்து, படித்த அல்லு அர்ஜுன் 'புஷ்பா' படத்தின் பிரமோஷனுக்காக சென்னை வந்த போது பிறந்து வளர்ந்து ஊரில் வெற்றி பெற வேண்டும், அதுதான் முக்கியமான வெற்றி என்று உத்வேகத்துடன் பேசினார். அவர் நினைத்தது போலவே 'புஷ்பா' படம் தமிழில் பெரிய வெற்றியைப் பெற்று நேரடி தமிழ்ப் படங்கள் அளவிற்கு வசூலைக் குவித்தது. கடந்த வருடம் வெளிவந்த படங்களில் படத்தை வாங்கியவர்களுக்கு லாபத்தைக் கொடுத்தது என தியேட்டர்காரர்களும் மகிழ்ச்சி. 25 கோடிக்கும் அதிகமான வசூல தமிழ்நாட்டில் கிடைத்ததாம்.
அது போலவே, ஹிந்தியிலும் இப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்று 75 கோடி வசூலைக் கடந்துவிட்டதாம். 100 கோடியைத் தாண்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள். தமிழ், ஹிந்தியில் இந்தப் படத்திற்காக அதிக அளவில் விளம்பரங்கள் செய்யவில்லை, பிரமோஷன் செய்யவில்லை. ஆனால், வேறு எந்தப் படமும் போட்டிக்கு இல்லாததால் இந்தப் படம் பெரிய வெற்றி பெற காரணமாக அமைந்துவிட்டது. மேலும், படத்தின் பாடல்களும் ஹிட்டாகி ரசிகர்களை தியேட்டர்களுக்கு வரவழைத்துவிட்டது.
அல்லு அர்ஜுனுடைய திறமைக்குக் கிடைத்த வெற்றி இது என்றாலும் அவருக்கு நேரமும் சரியாகக் கொடுத்து அவருக்கு பெயரை வாங்கிக் கொடுத்துவிட்டது.