ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
எச்.வினோத் இயக்கத்தில் அஜித், ஹூமா குரோசி, கார்த்திகேயா நடிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை. யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படம் ஜனவரி 13-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் இந்த படம் குறித்த தகவல்களை பேட்டிகளில் வெளியிட்டு வரும் எச்.வினோத், தற்போது வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், வலிமை படத்தில் அஜித் போலீசாக நடித்தபோதும் ஒரு சீனில்கூட காக்கி சட்டை அணிந்து நடிக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
அதோடு, இந்த படத்திற்கான கதையை அஜித்திடத்தில் சொன்னபோது, காவல்துறையில் உள்ள அனைவரும் மோசமானவர்கள் என்பது போன்று சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெறக்கூடாது. அதோடு, அரசியல் குறித்த சர்ச்சையான காட்சிகளோ, தனி மனித தாக்குதலோ இருக்கக்கூடாது என்றும் கண்டிசனாக சொல்லி விட்டார். அதனால் அதுபோன்ற கட்சிகள் எதுவும் வலிமையில் இடம்பெறவில்லை என்றும் ஒரு தகவல் வெளியிட்டுள்ள எச்.வினோத், இந்த படத்தில் இரண்டு பாடல்கள் எழுதியுள்ள இயக்குனர் விக்னேஷ்சிவன் அந்த பாடல்களுக்கு சம்பளம் வாங்க மறுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.