லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் இணைந்து நடித்துள்ள ஆர்ஆர்ஆர் படம் வரும் ஜனவரி 7ஆம் தேதி வெளியாக உள்ளது. பான் இந்தியா ரிலீஸாக வெளியாகவுள்ள இந்தப்படத்தில் பாலிவுட் நடிகர்களான அஜய் தேவ்கன், ஆலியா பட் ஆகியோர் நடித்துள்ளனர். தற்போது இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் பல இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இதன் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராஜமவுலி, “இந்தப்படத்தில் அஜய் தேவ்கன், ஆலியா பட் இருவருமே கெஸ்ட் ரோலில் தான் நடித்துள்ளனர். அவர்கள் படம் முழுவதும் வருவதாக சித்தரித்து ரசிகர்களை ஏமாற்ற விரும்பவில்லை.. அதேசமயம் கொஞ்ச நேரம் வந்தாலும், படத்தின் இரண்டு ஹீரோக்களுக்கும் இருக்கும் முக்கியத்துவம் அவர்களது கதாபாத்திரத்திற்கும் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி பான் இந்தியா ரிலீஸ் என்பதற்காக அவர்கள் இருவரையும் பாலிவுட்டில் இருந்து அழைத்து நடிக்க வைக்கவில்லை” என கூறியுள்ளார்.