எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
2021ம் ஆண்டு இன்றுடன் நிறைவடைகிறது. வருடத்தின் கடைசி நாள் வெள்ளிக்கிழமை தினத்தில் வந்ததால் இன்றைய தினமும் வழக்கம் போல புதிய படங்கள் வெளியாகின்றன. ஆனால், வழக்கத்திற்கு மாறாக இன்று 12 படங்கள் வெளியாவது யாரும் எதிர்பார்க்காத ஒன்று.
இந்த வருடத்தின் முதல் நாளும் வெள்ளிக்கிழமையில் வந்ததால் அன்றைய தினமும் புதிய படங்கள் வெளியாகின. வருடத்தின் கடைசி நாளும் வெள்ளிக்கிழமையாக அமைந்திருப்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. இன்றைய 12 படங்களுடன் சேர்த்து இந்த வருடத்தில் தியேட்டர்களில் வெளியான படங்களின் எண்ணிக்கை 138. ஓடிடி தளங்களில் வெளியான படங்களின் எண்ணிக்கை 42. மொத்தமாக 180 படங்கள்.
இன்றைய தினம் வெளியாகும் படங்கள்…
இ.பி.கோ 302
லேபர்
மதுரை மணிக்குறவர்
மீண்டும்
ஒபாமா உங்களுக்காக
ஓணான்
சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை
சில்லாட்ட
தமிழ் ராக்கர்ஸ்
தண்ணி வண்டி
தீர்ப்புகள் விற்கப்படும்
வேலன்