இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

இந்திய சினிமாவின் முக்கியமான இசையமைப்பாளர் இளையராஜா. 1400க்கும் அதிகமான படங்களில் இசையமைத்துள்ள இவர் இப்போதும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு முதல் இளையராஜா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளதாக செய்தி பரவியது.
இதுப்பற்றி இளையராஜா உடன் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக அவருடன் பயணித்து வரும் அவரின் நலம் விரும்பியான ஶ்ரீராமிடம் கேட்டபோது, அவர் கூறுகையில், ‛‛ராஜா சார் திருவண்ணாமலையில் இருக்கிறார். ஒவ்வொரு புத்தாண்டுக்கும் அவர் அங்கு செல்வது வழக்கம். இன்று இரவு சாமி கும்பிட்டு விட்டு நாளை(ஜன., 1) காலை மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்கிறார். மதியம் 2மணிக்கு சென்னை வருகிறார். இதுவே அவரது பயண திட்டம். அவரது உடல்நிலை பற்றி யாரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். ராஜா சார் சார்பில் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள'' என்றார்.