இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
கடாவர், ஆடு ஜீவிதம், அதோ அந்த பறவை போல உள்ளிட்ட பல படங்களில், பல மொழிகளில் நடித்து வருகிறார் அமலாபால். ரஞ்சிஷ் ஹி சாஹி என்ற வெப்சீரிஸ் மூலம் ஹிந்தியிலும் களமிறங்கி உள்ளார். இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் பல்வேறு நாட்டை சேர்ந்த பிரபலங்களுக்கு கோல்டன் விசா வழங்கி வருகிறது. நடிகை அமலாபாலும் இந்த விசாவை பெற்றுள்ளார்.
இதுப்பற்றி அவர் கூறுகையில், “இப்படிப்பட்ட கவுரவத்தை பெற்றதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியாகவும், பாக்கியமாகவும் உணர்கிறேன். நான் இப்போது துபாய் மக்களில் ஒருவராக உணர்கிறேன். இந்த புண்ணிய பூமி உலகில் எனக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்றாகும், நான் அடிக்கடி அங்கு சென்று வருவேன். இது அழகு மற்றும் ஆடம்பரமான அம்சங்களைப் பற்றியது மதிப்பீடானதல்ல, நாட்டில் உள்ள ஒவ்வொரு தனி நபரின் பார்வை மற்றும் குறிக்கோள் எந்தளவு ஆக்கபூர்வமானதாகவும் மற்றும் நேர்மறையானதாகவும் உள்ளது என்பதே ஆகும். இங்குள்ள மக்கள் அவர்கள் குணத்தால் பெரும் ஆச்சரியம் அளிக்கிறார்கள். இந்த அற்புதமான பாக்கியத்தை எனக்கு வழங்கியதற்காக துபாய் அரசு மற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார் அமலாபால்.