‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் வெளிவந்த 'புஷ்பா' படத்தில் இடம் பெற்ற 'ஓ அன்டாவா' பாடல் மூலம் பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது கிடைத்துள்ள ஓய்வில் கோவாவிற்குச் சென்று தன்னுடைய விடுமுறையைக் கழித்து வருகிறார். பிகினி ஆடையில் முகம் நிறைய சிரிப்புடன் 'நீ அழகு கோவா' என்ற கேப்ஷனுடன் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவிற்கு மட்டுமே 21 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் கிடைத்துள்ளன.
கணவர் நாகசைதன்யாவுடனான பிரிவை அறிவித்த பிறகு இப்போதுதான் வெளியில் சுற்றுலா கிளம்பியுள்ளார். கடந்த வாரத்தில் கேரளா சென்றவர், அப்படியே கோவா சென்றிருக்கிறார்.
சமந்தா நடித்து அடுத்து தமிழில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படமும், தெலுங்கில் 'சாகுந்தலம்' படமும் வெளிவர உள்ளது. தற்போது 'யசோதா' என்ற படத்தில் சமந்தா நடித்து வருகிறார். சில படங்களில் நடிக்கவும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.




