அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் |

தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் வரும் 29ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. இது தொடர்பாக கவுரவ ஆலோசகர் டி.ராஜேந்திரன், தலைவர் உஷா ராஜேந்தர் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் வி.பி.எப் கட்டணம். இக்கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால், இதுவரை அந்த கோரிக்கை நிறைவேறவில்லை.
அயல்நாடுகளில் பெரும்பாலும் வி.பி.எப் கட்டணம் கிடையாது. ஆனால் இங்கு தயாரிப்பாளர்கள் மீது ஒரு சுமையாக செலுத்தப்பட்டு இந்த கட்டணத்தால் சிறுபட தயாரிப்பாளர்கள் முதல் பெரிய பட்ஜெட் தயாரிப்பாளர்கள் வரை அனைவருமே பாதிப்புக்குள்ளாகிறார்கள். எனவே, வி.பி.எப் கட்டணத்தை இந்தியா முழுவதும் ரத்து செய்ய வேண்டும். அதே போல், எல்.பி.டி (லோக்கல் பாடி டேக்ஸ்) வரியையும் ரத்து செய்யவேண்டும் என்று அரசிடம் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகிறோம். இதனையும் வலியுறுத்தியும் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
திரைத்துறையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு உணர்வுள்ளவர்கள் அனைவரும் 'கவன ஈர்ப்பு' ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.