ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! | ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி | தேங்கி கிடந்த 'சுமோ' ஏப்., 25ம் தேதி திரைக்கு வருகிறார் |
டான்ஸ் மாஸ்டர் பிருந்தா முதன் முறையாக இயக்கி உள்ள படம் ஹே சினாமிகா. துல்கர் சல்மான் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் காஜல் அகர்வால், அதிதி ராவ் ஆகியோர் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். சில தினங்களுக்கு முன்பு துல்கர் சல்மானின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு தற்போது காஜல் அகர்வால், அதிதியின் போஸ்டர்களையும் வெளியிட்டுள்ளனர்.
இதில் அதிதி ராவ் போஸ்டரை நடிகர் ஆர்யாவும், அவரது மனைவியை சாயிஷாவும் வெளியிட்டனர். காஜலின் போஸ்டரை ஜெயம் ரவியும் அவரது மனைவி ஆர்த்தியும் வெளியிட்டனர். இப்படத்தில் காஜல் அகர்வால் மலர்விழி என்ற வேடத்திலும், அதிதி ராவ் மவுனா என்ற வேடத்திலும் நடித்து உள்ளார்கள். இவர்களுடன் டைரக்டர் கே பாக்யராஜ், குஷ்பு, சுகாசினி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளார்கள். திரைக்கதை மற்றும் பாடல்களை மதன் கார்க்கி எழுத, கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார் . இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி திரைக்கு வருகிறது.