பாடல்கள் ஹிட்டாவதற்கு 'ரீல்ஸ்' வீடியோக்கள்தான் முக்கியமா? | ரஷ்மி முரளி: தோழி நடிகையைத் தேடிய ரசிகர்கள் | விஜய் படம் ரீ-ரிலீசா… அப்போது அஜித் படமும் ரீ-ரிலீஸ்… | விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா தம்பதிக்கு பெண் குழந்தை | WWE-ல் ராணா டகுபட்டிக்குக் கிடைத்த பெருமை | வீர தீர சூரன் ஓடிடி வாங்கிய விலை இவ்ளோதானா? | ஓடிடி-யில் பெரும் விலைக்கு மோகன்லாலின் எல் 2 :எம்புரான் | புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே |
ஹிந்தியில் ராஞ்சனா, ஷமிதாப், படங்களைத் தொடர்ந்து தனுஷ் நடித்த படம் ‛அட்ரங்கிரே'. இவருடன் அக்ஷய் குமார், சாரா அலிகான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஓடிடியில் இந்த படம் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த படத்தின் புரமோஷன் சம்பந்தமாக கரண் ஜோகர் தொகுத்து வழங்கும் டிவி நிகழ்ச்சியில் தனுஷ் மற்றும் நடிகை சாரா அலிகான் கலந்து கொண்டனர்.
அப்போது கரண் ஜோகர், தனுஷிடத்தில் ஒருநாள் நீங்கள் ரஜினியாக கண்விழித்தால் என்ன செய்வீர்கள் என்று ஒரு கேள்வி கேட்டார். அதற்கு தனுஷ், பெரிதாக எந்த பில்டப்பும் செய்யாமல் ரஜினி சாரை போலவே நடந்து கொள்வேன் என்று பதில் அளித்தார். அதையடுத்து தனுஷ் இடத்தில் ஹிந்தி படங்களில் நடிப்பதற்கு அதிக இடைவெளி கொடுப்பது ஏன்? என்று அவர் கேட்ட போது, தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருவதினால் தான் ஹிந்தியில் அதிகமான படங்களில் நடிக்க முடியவில்லை. அதோடு நல்ல கதையும் நேரம் கிடைக்கும் போதும் ஹிந்தி பட வாய்ப்புகளை நான் தவற விடுவதில்லை என்றார்.