சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா | எக்ஸ் தளம் நெகட்டிவிட்டி நிறைந்தது : ரவி தேஜா கருத்து | ராஜமவுலி - மகேஷ்பாபு படத்தின் பெயர் 'வாரணாசி'? | ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் |
மலையாள சினிமாவை உலகறியச் செய்த மூத்த இயக்குனர், பல விருதுகளை வென்ற இயக்குநர் கே.எஸ்.சேது மாதவன் இன்று(டிச.,24) இயற்கை எய்தினார். நடிகர் கமல்ஹாசனை மலையாளத்தில் அறிமுகம் செய்தவரும் இவர் தான். தமிழில் சிவகுமார் நடிப்பில் இவர் இயக்கிய மறுபக்கம் திரைப்படம், புதுமையான மாறுபட்ட படைப்பாக, அனைவராலும் கொண்டாடப்பட்டு, அகில இந்திய அளவில் தங்கத்தாமரை விருது வென்ற முதல் தமிழ்ப்படமாக சாதனை படைத்தது. சேது மாதவன் மறைவுக்கு நடிகர் சிவகுமார் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினார். அவர் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
அதன் பின் அவர் கூறிய இரங்கல் செய்தியாவது : அகில இந்திய அளவில் தங்கத்தாமரை விருது வென்ற முதல் தமிழ்ப்படம் “மறுபக்கம்” என்ற திரைக்காவியத்தை உருவாக்கியவர். இந்திரா பார்த்தசாரதி அவர்களின் குறுநாவல் “உச்சிவெயில்” அந்தப் படத்தின் முலக்கதை, அதன் நாயகன் வேம்பு அய்யராக என்னை நடிக்க வைத்த மரியாதைக்குரிய இயக்குநர் கே.எஸ்.சேது மாதவன் அவர்களின் மறைவு திரையுலகிற்கு பேரிழப்பு. அவர் ஆன்மா சாந்தியடைய திரையுலகின் சார்பில் வேண்டுகிறேன் என்றார்.