ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பிருத்விராஜ் என்ற பப்லு. பப்லுவுக்கு தற்போது 55 வயதாகிறது. இந்த வயதிலும் இளைஞர்களை போல் சுறுசுறுப்பாக இயங்கி நடிப்பு, டான்ஸ் என அனைத்திலும் கலக்கி வருகிறார். பிட்னஸில் அதிகம் கவனம் செலுத்தி வரும் அவர், அடிக்கடி தனது சமூகவலைதளத்தில் வொர்க்- அவுட் வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் ஜிம்மில் வொர்க்-அவுட் செய்த போது 90 கிலோ எடையை வைத்து உடற்பயிற்சி செய்தார். ஆனால், அது தவறி நேராக அவரது கழுத்திற்கு அருகே விழுந்தது. நல்லவேளையாக அருகே மாஸ்டர் இருந்ததால் பப்லு மேல் முழு எடையும் விழாமல் பிடித்துக்கொண்டார். அதனால் பப்லுவுக்கு பாதிப்பு எதும் ஏற்படவில்லை.
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்க்கும் ரசிகர்கள் பலர் பதறிப்போய் பப்லுவிடம் நலம் விசாரித்து வருகின்றனர். ஆனால், தான் ஆரோக்கியமாக இருப்பதாக பப்லு தெரிவித்துள்ளார்.