நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
மகேஷ் பத்மநாபன் இயக்கத்தில் நாயகனாக ருத்ரா, நாயகியாக சுபிக்ஷா நடித்துள்ள படம் "சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை". சுபலக்ஷ்மி, வினோத் சாகர், கணபதி, பீட்டர் ஹார்ட்லி, மகேஷ் பத்மநாபன், சுனந்தா ஆகியோர் நடித்துள்ளனர். நபீஹா மூவீஸ் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் நுபாயஸ் ரகுமான் தயாரித்துள்ளார்.
ஆடியோ கிராபியில் கோல்ட் மெடல் வாங்கிய நாயகன், குடும்ப சூழ்நிலை காரணமாக தன் சொந்த ஊரில் நண்பனின் ஸ்டுடியோவில் வேலை பார்க்கிறான். சென்னையில் டாக்குமென்ட்ரிக்காக நாயகி வனப்பகுதிக்கு வர, அவருக்கு உதவியாக நாயகன் செல்கிறார். இவர்களுக்குள் நடக்கும் நிகழ்வுகள் தான் படத்தின் கதை. வாகனங்கள் செல்ல முடியாத வனப்பகுதியினுள் படப்பிடிப்பு குழுவினர் நடந்தே சென்று படப்பிடிப்பை நடத்தி உள்ளனர்.
கோவா உள்ளிட்ட பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று 6 விருதுகளை வென்றுள்ள இந்த படம் டிச.,24ல் தியேட்டர்களில் வெளியாகிறது.