பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
நீண்ட இடைவெளிக்கு பிறகு கே.பாக்யராஜ் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் 3.6.9. இதனை புதுமுக இயக்குனர் சிவ மாதவ் இயக்கி உள்ளார். கே.பாக்யராஜுடன் பிளாக் பாண்டி, அஜய் கண்ணன், சுகைல், சத்தி மகேந்திரா நடித்துள்ளனர். மாரீசன் ஒளிப்பதிவு செய்துள்ளார், கார்த்திக் ஹர்ஷா இசை அமைத்துள்ளார்.
படம் குறித்து இயக்குனர் சிவ மாதவ் கூறியதாவது: 81 நிமிடங்கள் தொடர்ச்சியாக இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இது ஒரு சாதனை நிகழ்வாகும். படப்பிடிப்பு புதுச்சேரி அடுத்த கிருமாம்பாக்கம் பிள்ளையார்குப்பத்தில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் காலை 11.40 மணிக்கு தொடங்கி மதியம் 1.01 மணி வரை தொடர்ச்சியாக 81 நிமிடங்கள் நடந்தது.
ஒரே நேரத்தில், ஒரு களத்தில் 24 கேமராக்கள், 150க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள், 450 பணியாளர்களை கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. நாலேஜ் இன்ஜினியரிங் என்ற அமைப்பின் நிறுவனர் ஹரிபா ஹனிப் நடுவராக இருந்து 81 நிமிடங்களில் படமாக்கப்பட்ட இத்திரைப்படத்தின் உருவாகத்தை நேரடியாக பார்வையிட்டு, அமெரிக்காவை தலையிடமாக கொண்டு செயல்படும் வேர்ல்டு ரெக்கார்டு யூனியன் என்ற அமைப்பிற்கு உலக சாதனைக்கு பரிந்துரை செய்துள்ளார். படத்தில் கதாநாயகி, சண்டை காட்சிகள், பாடல்கள் இல்லை. ஆனால், படத்தை பார்க்கும்போது இவை அனைத்தும் இடம் பெற்றிருக்கின்ற உணர்வை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.