பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
ராஸ்கல் பிக்சர்ஸ் தயாரிப்பில் கவுதம் ராகவேந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள த்ரில்லர் படம் 'ஆர் 23 ; கிரிமினல்'ஸ் டைரி'. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என ஒரே நேரத்தில் 3 மொழிகளில் உருவாகிறது. குறும்பட நடிகர் ஆதி சுந்தரேஸ்வரன், ஜெகா, ராகேஷ் சேது ஆகிய மூவரும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். யாஷிகா ஆனந்த், குக் வித் கோமாளி புகழ் பவித்ர லட்சுமி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.
பெரும் விபத்தை சந்தித்து மறுவாழ்வு பெற்றுள்ள யாஷிகா ஆனந்த் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் இந்த படத்தில் அவர் ஆக்ஷன் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.
படம் பற்றி இயக்குநர் கவுதம் ராகவேந்திரா கூறியதாவது: இந்தப்படத்தின் டைட்டில் மட்டுமல்ல, படத்தின் திரைக்கதையும் கூட இதுவரை வந்திராத புதுமையானதாக இருக்கும். படத்தின் ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது. படம் பார்க்கிறவவர்கள். ஒரு நிமிடத்த தவற விட்டாலும் அவர்களுக்கு படத்தின் கதை புரியாமல் போக வாய்ப்பிருக்கிறது. படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை மிஸ் பண்ணாம பார்த்தால் தான் இதில் ஒளிந்திருக்கும் மர்மம் என்னன்னு புரியும். இந்த படம் யாஷிகாவின் கேரியரில் முக்கியமான படமாக இருக்கும். என்கிறார்.