100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி |
தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுன் சமீபத்தில் தான் நடித்த புஷ்பா திரைப்படத்தில் பணியாற்றிய படக்குழுவினருக்கு தங்க மோதிரம் பரிசளித்து அசத்தினார். அதேபோல நடிகர் பிரபாஸ் நடித்து வரும் படங்களில் ஒன்றான ஆதிபுருஷ் படத்தின் படப்பிடிப்பும் சில நாட்களுக்கு முன் நிறைவு பெற்றது.. இந்தநிலையில் அந்தப்படத்தில் பணியாற்றிய படக்குழுவினருக்கு விலையுர்ந்த ரேடோ வாட்ச்சை பரிசளித்து அவர்களை மகிழ்வித்துள்ளார் பிரபாஸ்.
பிரபாஷ் முதன்முறையாக நடிக்கும் புராணப்படமான இந்த 'ஆதிபுருஷ்' படத்தை, இயக்குனர் ஓம் ராவத் இயக்கியுள்ளார். ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் இந்தியில் சுமார் 500 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி இருக்கிறது. தமிழ் உள்ளிட்ட பிறமொழிகளில் டப்பாகி வெளியிடப்பட உள்ளது. ராமாயணத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப்படத்தில் பிரபாஸ் ராமராக நடித்துள்ளார். ராவணனாக பாலிவுட் நடிகர் சயீப் அலிகான், சீதாவாக கீர்த்தி சனான் நடித்துள்ளனர்.