சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

தனுஷ் நடிப்பில் தற்போது தி கிரே மேன், அட்ராங்கி ரே மற்றும் மாறன், திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதில் தி கிரே மேன், அட்ராங்கி ரே ஆகிய இரண்டு படங்களும் ஓடிடியில் வெளியாகிறது. இதில் வருகிற டிசம்பர் 24ஆம் தேதி அக்ஷய் குமாருடன் இணைந்து தனுஷ் நடித்துள்ள அட்ராங்கி ரே ஹிந்தி படம் வெளியாக உள்ளது.
இந்த படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனுஷிடம், அக்ஷய் குமரை தொடர்ந்து வேறு எந்த ஹிந்தி பட ஹீரோவுடன் நடிக்க விரும்புகிறீர்கள்? என்று மீடியாக்கள் கேள்வி கேட்டபோது, ரன்பீர் கபூர் என்று தெரிவித்திருக்கிறார் தனுஷ். அவரும் நானும் ஒரே பிரேமில் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை அறிவதற்கு ஆவலாக இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.