ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள படம் புஷ்பா. ஐந்து மொழிகளில் வெளியாகும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சமந்தா நடனமாடியுள்ள ஓ சொல்றியா மாமா பாடல் வரிகள் ஆண்களை காம எண்ணங்கள் கொண்டவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளதால் அதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. அதோடு இந்த பாடலுக்கு நடனமாடிய சமந்தா மட்டுமின்றி, பாடலாசிரியர் விவேகா, பின்னணி பாடகி ஆண்ட்ரியா ஆகியோர் மீதும் வழக்குத் தொடரப்படும் என்றும் ஆண்கள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தநிலையில் புஷ்பா படத்தின் பிரமோசனுக்காக சென்னை வந்த நடி கர் அல்லு அர்ஜூனிடத்தில் அந்த பாடல் வரிகள் குறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்டனர். அதற்கு, ‛‛அந்த பாடல் வரிகள் உண்மைதானே'' என்று சிரித்துக் கொண்டே பதில் கொடுத்தார்.
இந்த நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் எஸ்.தாணு : புஷ்பா படத்தின் ஓ சொல்றியா மாமா பாடலுக்கு சர்ச்சை எழுந்திருந்தாலும் படம் வெளியான பிறகு இளைஞர்கள், குழந்தைகளின் தேசிய கீதமாக அகிலமெங்கும் வரும் என்று சொல்லி ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார்.
தாணுவின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஆபாச பாடலை தேசிய கீதத்துடன் ஒப்பிட்டு பேசுவதாக என ஆண்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.