சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

தமிழ் சினிமாவில் தரமான படங்களை வழங்கும் ஒரு நிறுவனம் சத்யஜோதி பிலிம்ஸ். இந்நிறுவனத்தின் தயாரிப்பில், அஷ்வின்ராம் இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழா, நெப்போலியன், காஷ்மிரா பர்தேஷி மற்றும் பலர் நடிக்கும் படம் 'அன்பறிவு'.
கொரோனா காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போய் சமீபத்தில் தான் முடிவடைந்தது. தற்போது படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். இதற்கு முன்பு ஹிப்ஹாப் தமிழா நடித்து வெளிவந்த 'சிவகுமாரின் சபதம்' படம் வியாபார ரீதியாக வெற்றி பெறவில்லை. அதனால், 'அன்பறிவு' படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில், கார்த்திக் நரேன் இயக்கத்தில், தனுஷ், மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்துள்ள 'மாறன்' படமும் ஓடிடி தளத்தில்தான் வெளியாகும் என இதற்கு முன்பு தகவல் பரவியது. இரண்டு படங்களையும் சேர்த்துத்தான் ஹாட்ஸ்டார் நிறுவனம் பெரிய விலை கொடுத்து ஓடிடி உரிமைகளை வாங்கியுள்ளதாகச் சொல்கிறார்கள்.
தனுஷ் நடித்து கடைசியாக வெளிவந்த 'ஜகமே தந்திரம்' படம் ஓடிடி தளத்தில்தான் வெளியானது. அடுத்து 'மாறன்' படமும் ஓடிடியா என தனுஷ் ரசிகர்கள் இப்போதே தங்கள் வருத்தங்களை வெளிப்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.