பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
2021ம் ஆண்டின் கடைசி சில வாரங்களில் இருப்பதால் சினிமா உலகம் மிகவும் பரபரப்பாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் பலரும் தங்களது படங்களை வெளியிட வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறார்கள். சுமார் 250 படங்கள் வரை வெளியீட்டிற்குத் தயாராக இருப்பதாகத் தகவல்.
இதனிடையே, இந்த வார வெளியீட்டில் தமிழ்ப் படங்களைத் தவிர வேற்று மொழிப் படங்களுக்குத்தான் வரவேற்பு அதிகமாக இருக்கிறது. ஹாலிவுட் படமான 'ஸ்பைடர்மேன் - நோ வே ஹோம்' படம் நாளை டிசம்பர் 16ம் தேதி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 2டி, 3டி தொழில் நுட்பங்களில் வெளியாகிறது. இதில் ஆங்கில மொழிப் படத்திற்கு மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் பெரும் முன்பதிவு நடந்துள்ளது. நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை இந்தப் படத்திற்கு சிறப்பான முன்பதிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தைகளுக்குப் பிடித்த சூப்பர் ஹீரோவாக ஸ்பைடர் மேன் இருப்பதே இதற்குக் காரணம்.
அடுத்து, அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடித்துள்ள தெலுங்குப் படமான 'புஷ்பா' தமிழில் டப்பிங் ஆகி டிசம்பர் 17ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. டப்பிங் படமாக இருந்தாலும் இப்படத்தின் பாடல்கள் ஹிட்டாகி ரசிகர்களிடம் சென்று சேர்ந்துள்ளது. நேற்று படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பிலும் கலந்து கொண்டார்.
இந்த வாரம் சில சிறிய தமிழ்ப் படங்கள்தான் வெளியாக உள்ளது. அவை, 'ஸ்பைடர்மேன், புஷ்பா' போட்டியை சமாளிக்க வாய்ப்பேயில்லை என்பதுதான் உண்மை.