கதையின் நாயகனாக சமுத்திரக்கனிக்கு அடுத்தடுத்து ரிலீஸ் | ரஜினியின் பிறந்தநாளில் 'டபுள்' அப்டேட்? | மாரி தொடரிலிருந்து வெளியேறுகிறாரா ஹீரோயின் ஆஷிகா படுகோன் | சைலண்டாக நிச்சயதார்த்தத்தை முடித்த தனுஷிக் | சீதாவின் தங்கையா இந்த வில்லி நடிகை | மீடியாவுக்கு குட்பை சொன்ன சுந்தரி நடிகை | அஜித் படத்தில் இருந்து வெளியேறியது ஏன்? - மனம் திறந்த விக்னேஷ் சிவன் | மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை |
துபாயில் அமீரகத்தின் 50வது பொன்விழா மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விஜய்சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அமீரகத்தில் வசிக்கும் ஆசிய நாடுகளை சேர்ந்த சிறந்த தொழில் அதிபர்கள், நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விஜய் சேதுபதி விருதுகளை வழங்கினார்.
விஜய் சேதுபதிக்கு சினிமாத்துறையில் செல்வாக்கு மிகுந்த நட்சத்திர விருதினை அஜ்மான் ஆட்சியாளர் அலுவலகத்தின் தலைவர் டாக்டர் மாஜித் பின் சயீத் அல் நுயைமி வழங்கினார்.
விழாவில் விஜய் சேதுபதி பேசியதாவது: நான் சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன். மிகப்பெரிய லட்சியங்களுடன் நான் கடந்த 2000ம் ஆண்டு நவம்பர் மாதம் துபாய்க்கு வந்தேன். இங்குள்ள பர்துபாய், அல் பஹிதி சாலைகளில் எனது கனவுகளுடன் நடந்து சென்றுள்ளேன். இங்கு வந்தபிறகு இது ஒரு புதிய நாடு, வெளிநாடு என்ற உணர்வு இல்லாமல் எனது 2வது தாயகமாக துபாயை உணர தொடங்கினேன்.
அதன் பிறகு 3 ஆண்டுகள் துபாயில் பணியாற்றிய பிறகு சென்னைக்கு சென்றேன். தொடர்ந்து திருமணம் செய்தேன். பின்னர் சினிமாவில் நடித்து இந்த நிலைக்கு நான் வந்தது ஒரு விபத்தாகும். சென்னையில் குடியேறிய பிறகு பலமுறை துபாய்க்கு வந்துள்ளேன். எப்போது வந்தாலும் நான் வசித்த பகுதியை மறக்காமல் சென்று பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளேன்.
இவ்வாறு அவர் பேசினார்.