சூப்பர் குட் பிலிம்ஸ் 99வது தயாரிப்பில் விஷால் | 'தாமரை நெஞ்சம்' ஒரு படம் போதுமே: பாலசந்தர் அளித்த பதில் | தமிழில் தனது கடைசி படத்தில் நடித்த சரோஜா தேவி | ‛வெள்ளி விழா' படங்களில் முத்திரை பதித்த சரோஜா தேவி : வரிசை கட்டிய விருதுகள் | தனது உயிர் சென்னையில் பிரிய வேண்டும் என்று பேசியிருந்த சரோஜா தேவி | புதிய போட்டி வந்தாலும், சம்பளத்தை உயர்த்திய அனிருத் | தங்கள் தனிப்பட்ட சண்டையை மேடையில் பேசிய விஜய் சேதுபதி, பாண்டிராஜ் | ரவுடி சோடா பாபுவாக மாறிய அல்போன்ஸ் புத்திரன் | கமலை தொடர்ந்து நான்கு வேடங்களில் நடிக்கும் அல்லு அர்ஜுன் | எம்ஜிஆர் உடன் 26 ; சிவாஜி உடன் 22 படங்கள் : தமிழ் சினிமாவை கலக்கிய ‛கன்னடத்து பைங்கிளி' சரோஜா தேவி |
பொதுவாக இளம் முன்னணி ஹீரோக்கள் தங்களது படம் வெளியாகும் தினத்தன்றே காலைக்காட்சியில் தியேட்டர்களுக்கு சென்று ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்து படத்திற்கான வரவேற்பு எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வார்கள். படத்திற்கு புரோமோஷன் ஆகவும் இது உதவும். அதேசமயம் பெரும்பாலும் கதாநாயகிகள் இப்படி தியேட்டர்களுக்கு வந்து படம் பார்ப்பது ரொம்பவே குறைவு தான். ஆனால் நடிகை ஸ்ரேயா தற்போது தியேட்டருக்கு நேரிலேயே வந்து தனது படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்துள்ளார். அதுவும் தியேட்டருக்கு ஆட்டோவிலேயே வந்து இறங்கி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.
ஸ்ரேயா நடிப்பில் நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது தெலுங்கில் வெளியாகியுள்ள படம் கமனம். இந்த படத்தில் நித்யா மேனன் இன்னொரு கதாநாயகியாக நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் சுஜனா ராவ் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஹைதராபாத்தில் உள்ள மல்லிகார்ஜுன் என்கிற தியேட்டரில் இந்தப்படத்தை பார்ப்பதற்காக ஸ்ரேயா ஆட்டோவில் வந்து இறங்கிய புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.