கமல்ஹாசன் உடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் மிருணாள் தாகூர் | ஜெய் ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் : காதல், திரில்லர் படமாக உருவாகிறது | அஜித்தின் அடுத்த படத்தை இயக்குகிறாரா தனுஷ்? | சர்ச்சையை கிளப்பிய நானியின் டாட்டூ வார்த்தை | கதாநாயகனாக மாறிய பிரேமலு காமெடி நடிகர் | அய்யப்பனும் கோஷியும் இயக்குனரின் கனவு படத்தை நிறைவு செய்த பிரித்விராஜ் | கூலி பட டீசர் மார்ச் 14ல் வெளியாவதாக தகவல் | அமரன் படத்துக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் | ஐதராபாத்தில் சூர்யா 45வது படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு | கேங்கர்ஸ் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு |
சின்னத்திரை நிகழ்ச்சி, ஆல்பம் மூலம் பிரபலமானவர் நடிகர் அஷ்வின் குமார். முதல் ஆல்பம் வெளியான நாள் முதலே எந்த பத்திரிகையாளரிடமும் சரியான தொடர்பில் அவர் இருந்ததில்லை. ஒவ்வொரு ஆல்பம் வெளியிடும்போது மட்டும் அந்தந்த நிறுவனங்கள் கேட்டுக் கொண்டால் மீடியாக்களை சந்திப்பார். அதுவும் வற்புறுத்தி தான் ஒவ்வொரு முறையும் அவரிடம் பேட்டி எடுக்க முடியும். பெரும்பாலும் பல கேள்விகளை தவிர்த்து விட்டே பேசுவார்.
இன்றைக்கு அவரை ரசிக்க ஒரு கூட்டம் உள்ளது. இந்த இடத்திற்கு வர எவ்வளவு கஷ்டப்பட்டாரோ அத்தனையையும் ஒரே ஒரு ஆடியோ விழாவில் அவர் பேசிய பேச்சால் வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். இப்போது தான் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த ஒரு படமும் ரிலீஸ் ஆகாத நிலையில் இப்பட விழாவில் அஷ்வின் தலைமை ரசிகர் மன்றம் என போஸ்டர்கள் இடம் பெற்றன. அதோடு விழாவில் பங்கேற்ற ரசிகர்கள் அஷ்வின் அஷ்வின் என கத்தி கூப்பாடு போட்டனர். போதாகுறைக்கு மற்றொரு நடிகரான புகழும் தன் பங்கிற்கு ரசிகர்கள் கூட்டத்தை வரவழைத்து கத்த வைத்தார். அந்த விழாவில் இவர்கள் இருவரும் ரசிகர்களை அழைத்து வந்து அலப்பறை செய்தனர்.
அந்த மக்களை பார்த்ததும் உணர்ச்சிவசத்தில் வாய்க்கு வந்ததை பேசினார். கூடவே பத்திரிகையாளர்களையும் தர்ம சங்கடத்துக்கு ஆளாக்கினர். தனக்கு கதை பிடிக்கவில்லை என்றால் தூங்கி விடுவேன் என்றும், அப்படி 40 கதை கேட்டு தூங்கிவிட்டதாக பட விழாவில் அஷ்வின் பேசியது சமூக வலைதளங்களில் உதவி இயக்குநர்கள், படைப்பாளிகள் மத்தியில் பெரும் மன வருத்தத்தை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் மீமிஸ்களாக போட்டு அவரை வறுத்தெடுத்தனர்.
முதல் படமே இத்தனை சர்ச்சை. என்ன சொல்ல போகிறாய் படம் வெளிவந்து ஒரு வேலை படம் சரியாக போகாத பட்சத்தில் தூங்காகமல் கதை கேட்டியே, அஷ்வின் படத்தில் எங்களை தூங்க வைத்தியே என்று எதிர் விமர்சனங்களும் வர வாய்ப்புள்ளது. விளையாட்டாக பேசியது இவ்வளவு தூரம் பிரச்னை தலைதூக்கும் என்று அவர் நிச்சயம் எண்ணி பார்த்திருக்கமாட்டார். இதுப்பற்றி பத்திரிகையாளர் கேள்வி கேட்க முற்பட்டால் அவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிர்க்கிறார். வழக்கமாக எந்த தகவல் தொடர்பும் பத்திரிக்கையாளரிடம் வைத்துக் கொள்ளாதவர், இதற்கு மட்டும் பதில் சொல்வாரா என்கின்றனர் இந்த துறையில் இருப்பவர்கள்.
அஷ்வின் ஒரே ஒரு மன்னிப்பு கேட்க இத்தனை சிரமப்படுபவர், தனக்கு சாதகமாக பேச, சில ஆட்களை மட்டும் வர வரவழைத்து பேசியிருக்கிறார். ஆனாலும் அஷ்வின் மீது உள்ள கோபம் படைப்பாளிகளிடம் அவ்வளவு சீக்கிரம் மறையாது. தமிழ் சினிமா எத்தனையோ ஜாம்பவான்களை பார்த்து இருக்கிறது. ஆனால் முதல் படமே இன்னும் முழுமையாக வெளியாக மக்களிடம் சேராமல் உள்ளது. அதற்குள் இவ்வளவு அலப்பறை. இனியாவது மற்றவர்களை மதித்து பேச கற்றுக் கொள்ளுங்கள் சூப்பர் ஸ்டாராக சுற்றிக் கொண்டிருக்கும் ஆரம்ப நடிகர் அஷ்வினே.... என சமூகவலைதளத்தில் அவருக்கு அறிவுரை செய்ததை காண முடிந்தது. இன்னும் ஆரம்பிக்கவே இல்ல அதுகுள்ள இவ்வளவு அலப்பறையா....!
குறிப்பு: என்ன சொல்ல போகிறாய் படத்தின் தயாரிப்பாளருக்கு மட்டும் 3 படங்கள் நடித்து கொடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதில் 2வது படம் பிரபு சாலமன் இயக்கத்தில் படம் முடிவடையும் நிலையில் உள்ளதாம். அஷ்வின் பேச்சால் படத்தின் வியாபாரம் பாதிக்கும் என தயாரிப்பாளர் கலக்கத்தில் உள்ளாராம். இதனால் அடுத்த படத்தை துவங்குவதற்கு தயாரிப்பாளர் என்ன செய்ய போகிறார் என்று தெரியவில்லை.