பிளாஷ்பேக்: ஜெயலலிதாவின் வெள்ளித்திரைப் பயணத்திற்கு வெளிச்சம் காட்டிய “வெண்ணிற ஆடை” | புதிய காதலியுடன் விழாவில் ஆமீர்கான் | பராசக்தி, தேவதையை கண்டேன், கிங்ஸ்டன் - ஞாயிறு திரைப்படங்கள் | அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் |
திரைக்கதை மன்னன் என புகழப்படும் பாக்யராஜின் வாரிசாக அறிமுகமானவர் சாந்தனு. இன்னும் தமிழ் சினிமாவில் நிலையான இத்துடக்காக போராடி வருகிறார். கடைசியாக விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் விஜய்யுடன் மாளவிகா, ஆண்ட்ரியா, ரம்யா, கௌரி கிஷன், சாந்தனு என்று பலர் நடித்திருந்தாலும் இவர்களுக்கு எல்லாம் படத்தில் பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று மீம்களை போட்டு கேலி செய்தனர்.
அதற்கு பதில் கொடுத்த சாந்தனு, எத்தனை நிமிடங்கள் வருகிறோம் என்பது முக்கியமில்லை. விஜய் போன்ற ஸ்டார் படத்தில் ஒரு நிமிடம் நடித்தாலே எனக்கு போதும் என்று கூறி இருந்தார். அதே போல தன்னை கேலி செய்பவர்களுக்கு கூட அவர்களிடம் மிகவும் முதிர்ச்சியாகவே பதில் அளிப்பார் சாந்தனு. தற்போது இவர் 'முருங்கைகாய் சிப்ஸ்' என்ற படத்தில் நடித்துள்ளார். ஸ்ரீஜர் என்பவர் இயக்கி இருக்கும் இந்த படத்தில் சாந்தனுவிற்கு ஜோடியாக அதுல்யா நடித்து உள்ளார். இவர்களுடன் கே.பாக்யராஜ், மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு, ரேஷ்மா, மதுமிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார். வரும் 10 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்திற்காக நடிகர் சாந்தனு பல்வேறு விதமான புரமோஷன் கலை சமூக வலைத்தளத்தில் செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இந்தப் படத்தின் போது எடுக்கப்பட்ட ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்றை சமூகவலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.
அதில் 'ஒரு ஜாலியான பொழுதுபோக்கு படம் மேதாவி அறிவைக் கொண்டு யாரும் இந்த படத்திற்கு வர வேண்டாம். ஏனென்றால் உங்களுக்கு இதைவிட வாழ்க்கையில் பல வேலைகள் இருக்கும். மற்றவர்கள் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வாங்க, உங்களின் கவலைகளை மறப்பீர்கள்' என்று பதிவிட்டிருந்தார். இதற்கு ஒருவர் பொழுதுபோக்கு படத்திற்கு நாங்கள் எங்களுடைய பணத்தை வீணாக்க வேண்டும் என்று கமெண்ட் செய்திருந்தார். இதற்கு பதிலளித்த சாந்தனு 'அப்போ வீணாக்காதீர்கள் சிம்பிள்' என்று பதில் கொடுத்திருக்கிறார்.