ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
மார்வெல் ஸ்டுடியோஸ், கொலம்பியா பிக்சர்ஸ், பாஸ்கல் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஜோன் வாட்ஸ் இயக்கத்தில், டாம் ஹாலந்த், ஜென்டாயா, பெனெடிக்ட் கம்பர்பாட்ச் மற்றும் பலர் நடிக்கும் படம் ஸ்பைடர்மேன் - நோ வே ஹோம்.
இப்படம் அமெரிக்காவில் டிசம்பர் 17ம் தேதி வெளியாக உள்ளது. ஆனால், இந்தியாவில் ஒரு நாள் முன்னதாக டிசம்பர் 16ம் தேதியே தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிட உள்ளார்கள். இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பைடர்மேன் படங்களுக்கு இந்தியாவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் ரசிகர்களாக இருக்கிறார்கள். அமெரிக்காவில் இப்படத்திற்கானஆன்லைன் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமானது. ஆனால், ஒரே நேரத்தில் பலர் ஆன்லைனில் முயற்சித்தால் பிரபல எஎம்சி மற்றும் பேன்டங்கோ இணையதளங்கள் முடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு அவஞ்சர்ஸ் - என்ட்கேம் படம் வெளியான போதும் இதே போல்தான் ஆன்லைன் முன்பதிவு தளங்கள் முடங்கியது.
ஸ்பைடர்மேன் - நோ வே ஹோம் படமும் வசூலில் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.